search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உ.பி. எம்.எல்.ஏக்கள்"

    கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    லக்னோ:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

    மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 350க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணத்துக்கு உத்தரப்பிரதேசம் மாநில எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புக்கு உ.பி. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் அளிக்க உள்ளோம். மேலும், எம்.எல்.ஏ நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட உள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நேற்று நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், திமுக தலைவர் கருணாந்தியின்  மறைவுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது. #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #UPMLAS
    ×